தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தடகளம்: தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை - பி.யூ சித்ரா தங்கப்பதக்கம்

சுவீடன் நாட்டில் நடைபெற்ற மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பி.யூ சித்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தடகளம்: தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை

By

Published : Jun 20, 2019, 7:31 AM IST

சுவீடன் நாட்டில் ஃபோக்கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மகளிர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.யூ சித்ரா பங்கேற்றார்.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சிறப்பாக செயல்பட்ட இவர், இலக்கை நான்கு நிமிடம் 12.65 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதேபோல், ஆடவர் பிரிவு 1500 மீட்டர் போட்டியில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சனும் தங்கம் வென்றார். முன்னதாக, தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும், பி.யூ சித்ரா தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details