தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கின் காரணமாக ஏப்ரல் 25ஆம் தேதியன்று, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து கணினி முன்பதிவு மையங்களும் இயங்காது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
`முழு ஊரடங்கு நாளில் கணினி முன்பதிவு மையங்கள் இயங்காது`- தென்னக ரயில்வே அறிவிப்பு! - தென்னக ரயில்வே அறிவிப்புகள்
சென்னை: ஏப்ரல் 25 ஆம் தேதியன்று பயணிகள் முன்பதிவு மையங்கள் இயங்காது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு நாளில் கணினி முன்பதிவு மையங்கள் இயங்காது
பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்ய முன்பதிவு மையங்களை அணுக வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், நடப்பு முன்பதிவு கவுண்டர்கள் (current reservation counters) வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.