தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கிய அமைச்சர்! - Minister Rajendra Balaji

விருதுநகர்: கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

Minister Rajendra Balaji
Minister Rajendra Balaji

By

Published : Aug 13, 2020, 7:47 PM IST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், வருவாய் வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

அப்போது, விருதுநகர் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்த ஊரக காவல் நிலைய தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த அய்யனார், சின்ன மூப்பன்பட்டி கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த முருகேசன் ஆகியோரது வாரிசுகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

மேலும், விரைவில் வாரிசு அடிப்படையில் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details