திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கரோனா கால கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், நான்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கரோனா நிவாரணத் தொகையாக சுய உதவிக் குழு ஒன்றுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ரூபாய் 40 லட்சம் கடன் தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் நகராஜன் கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், "அதிமுக அரசு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஏற்கனவே இருந்த கடன் தொகை ஐந்து லட்ச ரூபாயை தற்போது 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளது.
பெண்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை அவர்கள் கட்டாயம் திருப்பி செலுத்துவார்கள் என்று பெண்கள் மீது முழு நம்பிக்கை வைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தொகையை இந்த அரசு வழங்கி வருகிறது" என்றார்.