தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள்களை அரசே வழங்க வேண்டும் ! - ration goods to all migrant labours

சென்னை : வெளிமாநிலத் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான விலையில்லா ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள்களை அரசே வழங்க வேண்டும் !
வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள்களை அரசே வழங்க வேண்டும் !

By

Published : Jul 10, 2020, 7:37 PM IST

கரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்க கோரியும், திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்களை மீட்க கோரியும், வழக்குரைஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்மை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டது.

அதேசமயம் இந்த உத்தரவை அமல்படுத்தா விட்டால் அது குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரவும் மனுதாரருக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான ரேஷன் பொருள்கள் வழங்கப்படவில்லை எனவும், மேற்கு வங்கத்தில் சிக்கியுள்ள கூலித்தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை இல்லாவிட்டாலும் உணவு பொருள்கள் வழங்கப்படுவதாகவும், வழக்குரைஞர் சூரிய பிரகாசம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் குடிபெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ரேஷன் அட்டை இருந்தாலும், இல்லாவிட்டாலும் ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க கோரிய வழக்கில் செங்கல் சூளை உரிமையாளர் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக அரசு தரப்பு வழக்குரைஞர் தெரிவித்ததை ஏற்று நீதிபதிகள் விசாரணையை ஜூலை 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details