புதுக்கோட்டை நகர வீதியில் அமைந்துள்ள அண்ணாசிலை அருகில் புதுக்கோட்டை நகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (ஜூலை 4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இருசக்கர வாகனத்திற்கு இறுதிச் சடங்கு : புதுக்கோட்டையில் நூதனப் போராட்டம்! - protest in Pudukkottai
புதுக்கோட்டை : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு இறுதிச் சடங்கு நடத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து, தாரை தப்பட்டை அடித்து, சங்கு ஊதி வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய சங்கத்தினர், நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற விலை உயர்வு மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும். எனவே, விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தினர். தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.