தமிழ்நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு திருப்பூர் நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட ஆறு பேருக்கு இரட்டை மரண தண்டனையை வழங்கியிருந்தது.
இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று முக்கிய குற்றவாளியான சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டு மீதமிருந்த ஐவருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் உரிய சாட்சிகளை தயார் செய்த மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பெரியாரிய அம்பேத்கர் அமைப்புகள் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க:கரோனாவுடன் வெளியூர் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு போலீஸ் வலைவீச்சு