தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கறுப்பர் கூட்டத்துக்கு எதிர்ப்பு: கந்த சஷ்டி கவசம் பாடிய பெண்கள்! - கந்தசஷ்டி பாடிய பெண்கள்!

ஈரோடு: கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை கண்டித்து திண்டல் முருகன் கோவில் முன்பு பெண்கள் கந்தசஷ்டி பாடல் பாடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கருப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பு - கந்தசஷ்டி பாடிய பெண்கள்!
கருப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பு - கந்தசஷ்டி பாடிய பெண்கள்!

By

Published : Jul 25, 2020, 3:57 PM IST

கந்தசஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் இழிவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை25) ஈரோடு திண்டல் மலை முருகன் கோயில் முன்பு பாஜக மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் தலைமையில் பாஜகவினர் மற்றும் பெண்கள் கந்தசஷ்டி கவசம் பாடலை பாடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் கறுப்பர் கூட்டத்தை கூண்டோடு கைது செய்ய வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கோஷம் எழுப்பினார்கள்.

இதையும் படிங்க: நாமக்கல் மருத்துவக் கல்லூரி 2021இல் கட்டிமுடிக்கப்படும்' - அமைச்சர் சரோஜா

ABOUT THE AUTHOR

...view details