தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளான தந்தை-மகன் இருவரும் காவல் நிலையத்தில் துன்புறுத்தி கொல்லப்பட்ட நிகழ்வில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஈடுபட்டது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்கு தடை - எஸ்.பி வருண்குமார் உத்தரவு - Prohibition of Friends of Police in Ramanathapuram
ராமநாதபுரம்: காவல்துறையில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பயன்படுத்த எஸ்.பி வருண்குமார் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Prohibition of Friends of Police in Ramanathapuram
இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை பணிகளில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஈடுபடுத்துவதை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தடை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை பணிகளில் வெள்ளிக்கிழமை முதல் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஈடுபடுத்த தடைவிதித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
TAGGED:
Ramanathapuram district news