தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் மூன்று திரைப்படங்கள்! - கோலிவுட் செய்திகள்

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. தயாரித்துள்ள மூன்று திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jsk
Jsk

By

Published : Jun 13, 2020, 6:23 PM IST

கரோனா பிரச்சனை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டுவருகின்றனர்.

சமீபத்தில், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘பொன் மகள் வந்தாள்’ திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படம் வரும் 19ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த வரிசையில் புதிதாக மூன்று திரைப்படங்கள் இணைந்துள்ளன. இதுகுறித்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'வா டீல்', 'அண்டாவ காணோம்', ‘மம்மி சேவ் மீீ’ ஆகிய மூன்று படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளன. விரைவில் திரைப்படங்கள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அருண் விஜய், கார்த்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'வா டீல்' திரைப்படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார். அதேபோல் வேல்மதி இயக்கியுள்ள அண்டாவ காணோம் படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details