தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

130 படுக்கையுடன் கரோனா சிகிச்சைக்கு தயாராகும் தனியார் பள்ளி - நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி: கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 130 படுக்கை வசதியுடன் தனியார் பள்ளியை தயார் படுத்தும் பணி நீலகிரியில் நடந்து வருகிறது.

130 படுக்கை வசதியுடன் கரோனா சிகிச்சைக்கு தயாராகும் தனியார் பள்ளி
130 படுக்கை வசதியுடன் கரோனா சிகிச்சைக்கு தயாராகும் தனியார் பள்ளி

By

Published : Jul 21, 2020, 12:44 PM IST

நீலகிரி மாவட்டத்திற்கு பிற மாவட்டங்களிலிருந்து ஒரு சில நபர்கள் திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்கு வந்து செல்வதால் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் நீலகிரியில் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 513 தாண்டியுள்ளது.

தொற்று ஏற்பட்டவர்கள் கோவை மற்றும் உதகை மருத்துவமனை, தனியார் பள்ளி, கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே, தொற்று அதிகரித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 130 படுக்கை வசதிகளுடன் கூடிய தனியார் பள்ளியை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.

மேலும் உணவு, போர்வை, குடிநீர் வசதிகளை அலுவலர்கள் தயார்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details