தஞ்சை மாவட்டத்தில் கரோனாவால் 481 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திற்கு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மூலம் தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இச்சூழலில், தஞ்சையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றின் தாளாளருக்கும் அவருடைய குடும்பத்தினர் இரண்டு பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் தனியார் பள்ளி தாளாளர், முதல்வருக்குக் கரோனா! - தனியார் பள்ளி தாளாளருக்குக் கரோனா
தஞ்சை: தனியார் பள்ளியின் தாளாளருக்கும் முதல்வருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பள்ளி தாளாளர் கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரைக்குச் சென்று வந்துள்ளதையடுத்து, அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், கரோனா உறுதி செய்யப்பட்டது. அப்பள்ளி முதல்வருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நான்கு பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாள்களாக அப்பள்ளிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தங்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று அச்சம் அடைந்துள்ளனர். இதனிடையே அவர்கள் குறித்த விவரங்களையும் மாநகராட்சி அலுவலர்கள் சேகரித்து வருகிறார்கள்.