தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தண்டையார்பேட்டையில் கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது - Corona infection

சென்னை: தண்டையார்பேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 6,221 நபர்களில் 4,191 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Corona infection in Chennai
Corona infection in Chennai

By

Published : Jun 28, 2020, 3:02 PM IST

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும் கரோனா தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துவருகிறது.

மேலும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ராயபுரத்துக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு கொண்ட தண்டையார்பேட்டையில் தற்போது அதன் பரவல் சற்று குறைந்துள்ளது.

கடந்த ஒருவாரமாக தண்டையார்பேட்டையில் பாதிக்கப்பட்டோர் விழுக்காடு கிட்டத்தட்ட 1.6 ஆகவே உள்ளது. இந்தப் பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதேசமயம் மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுவரையிலும் 6,221 நபர்கள் தண்டையார்பேட்டையில் இந்த கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,191 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 1,926 நபர்களும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, ராயபுரம் - 7455 பேர், திரு.வி.க. நகர் - 4,387 பேர், வளசரவாக்கம் - 2,310 பேர், தண்டையார்பேட்டை - 6,221 பேர், தேனாம்பேட்டை - 5,758 பேர், அம்பத்தூர் - 2,120 பேர், பேர்கோடம்பாக்கம் - 5,432 பேர், பேர்திருவொற்றியூர் - 2, 019 பேர், அடையாறு - 3,202 பேர், அண்ணா நகர் - 5,506 பேர், மாதவரம் - 1655 பேர் மணலி - 868 பேர் சோழிங்கநல்லூர் - 1,101 பேர் பெருரங்குடி - 967 பேர் ஆலந்தூர் - 1,300 பேர் என மொத்தம் 15 மண்டலங்களில் 51,699 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 31,045 நபர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details