மெக்சிகோவின் ஓக்சாக்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4ஆக பதிவு! - மெக்சிகோ நிலநடுக்கம்
மெக்சிகோவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து எந்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.
![மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4ஆக பதிவு! மெக்சிகோ நிலநடுக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:48:08:1592932688-7743629-918-7743629-1592931698765.jpg)
மெக்சிகோ நிலநடுக்கம்
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியேறி நீண்ட நேரம் திறந்தவெளியில் இருந்தனர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் இல்லை.