மதுரை: தூத்துக்குடி துறைமுக துணை பாதுகாவலர் கேப்டன் பிரவின் குமார்சிங், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்தமனுவில், "தூத்துக்குடி கடல் பகுதியில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த ‘அமெரிக்க சீமேன் கார்டு ஓகிய’ என்ற கப்பலை தருவைகுளம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கியூ பிரிவு காவல் துறையினர் கப்பலில் இருந்த 35 பேர் உள்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கை, விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம், கப்பலில் இருந்த 35 பேர் உள்பட அனைவருக்கும் தண்டனை வழங்கியது. மேல்முறையீடு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை அனைவரையும் விடுதலை செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் முதல் பிளாட்பாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.