தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நாகர்கோவில் தபால் ஊழியருக்கு கரோனா உறுதி - Corona Confirm Post office Employee

கன்னியாகுமரி: நாகர்கோவிலைச் சேர்ந்த தபால் துறை ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தபால் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Post office Sealed In Nagarcoil
Post office Sealed In Nagarcoil

By

Published : Jun 24, 2020, 10:22 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த தபால் துறை ஊழியர் ஒருவர் தக்கலை தலைமை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நாகர்கோவில் தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தக்கலையில் பணிபுரிந்து வந்த தபால் ஊழியர் சமீபத்தில் சென்னை சென்று விட்டு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குமரிக்கு திரும்பினார்.

அப்போது, அவருக்கு ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு இன்று (ஜூன் 24) வந்தது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரது மனைவி பணிபுரிந்து வந்த நாகர்கோவில் தபால் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அவரது மனைவிக்கும் கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:சுஷாந்த் சிங் மரணத்தால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details