தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தபால் நிலைய ஊழியருக்கு கரோனா! - தபால் நிலையம் மூடல்

ஈரோடு: தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தபால் நிலையத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோட்டில் தபால் நிலைய ஊழியருக்கு கரோனா - தபால் நிலையம் மூடல்
ஈரோட்டில் தபால் நிலைய ஊழியருக்கு கரோனா - தபால் நிலையம் மூடல்

By

Published : Jul 3, 2020, 1:28 PM IST

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கடந்த வாரம் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் கடந்த 27ஆம் தேதி ஈரோடு பெரியார் நகர் பகுதியில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையத்திற்கு சென்று வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அன்று பணியில் இருந்த 7 பேருக்கும் நோய் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றிவரும் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தலைமை தபால் நிலையம் வந்த ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் தலைமை தபால் நிலையத்தை உடனடியாக பூட்டி பொதுமக்களை வெளியேற்றியதுடன் தபால் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.

மேலும் தபால் நிலையத்தில் பணியாற்றிவரும் ஊழியர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதுடன் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

இதையும் படிங்க: 'ஏரியை வைத்து அரசியல் செய்கிறார்'- எம்.பி. குற்றஞ்சாட்டுக்கு அமைச்சர் பதில்!

ABOUT THE AUTHOR

...view details