தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

’பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்’ - சுகாதாரத் துறை இயக்குனர்

புதுச்சேரி : தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து சிலர் வெளியில் வருவதாகத் தகவல் வந்துள்ளதால், பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு: "பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்"- சுகாதார இயக்குனர்!
கரோனா குறித்து பேசிய சுகாதார இயக்குனர் மோகன் குமார்

By

Published : Jun 29, 2020, 6:38 PM IST

புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை இயக்குனர் மோகன் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரியில் 532 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் இன்று 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 379 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இந்நிலையில், இன்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா பரிசோதனை குறித்து பேசிய சுகாதார இயக்குனர் மோகன் குமார்

புதுச்சேரியில் 163 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளைச் சேர்ந்த சிலர் தடையை மீறி வெளியில் வருவதாகத் தகவல் வந்துள்ளது. எனவே பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமிக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :வெளியிடப்பட்ட புதுச்சேரி முதலமைச்சரின் கரோனா பரிசோதனை முடிவு

ABOUT THE AUTHOR

...view details