தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குளத்து மண்ணை தனியாருக்கு விற்றவர் மீது வழக்கு: வாகனங்கள் பறிமுதல் - குமரி மாவட்டம் நாகர்கோவில்

கன்னியாகுமரி: நாகர்கோயில் அருகே குடிமராமத்து திட்டத்தின்கீழ் குளத்தில் மண் எடுத்து தனியார் தோட்டத்திற்கு விற்றதாக ஐந்து டிராக்டர்களைப் பறிமுதல்செய்த காவல் துறையினர்,  இது தொடர்பாக எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாகனங்கள் பறிமுதல்
வாகனங்கள் பறிமுதல்

By

Published : Jun 20, 2020, 1:51 PM IST

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புளியடி கிராமத்திலுள்ள குளத்தில் குடிமராமத்துப் பணி திட்டத்தின்கீழ் மண் எடுத்து கரையைப் பலப்படுத்த திட்டமிடப்பட்டு இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்காகக் குளத்திலிருந்து மண் எடுத்து கரையைப் பலப்படுத்துவதற்குப் பதிலாகத் தனியார் தோட்டங்களுக்கு விற்கப்படுவதாகப் புகார் எழுந்தது.

இது குறித்து நீர்வள ஆதார அமைப்பு அலுவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் வடசேரி குளத்திற்குச் சென்ற காவல் துறையினர் கரையைப் பலப்படுத்த மண் கொட்டப்படாமல் மண்ணை விலைபேசி தனியார் தோட்டங்களுக்கு கொண்டுசென்ற ஐந்து டிராக்டர்களையும் பறிமுதல்செய்தனர்.

மேலும் இது தொடர்பாக சோமு, கண்ணன், பால்மணி, சார்லஸ், மணிகண்டன் உள்பட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details