கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காவல் கண்காணிப்பாளர் அருள்ராசு உத்தரவின்பேரில், பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் கே.ஜி. சிவக்குமார் மேற்பார்வையில் நகர மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வைரம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கார்த்திக், குமார், சக்தி, வடிவேல், தலைமை காவலர் ராஜ்குமார், முதல் நிலை காவலர்கள் கல்யாணசுந்தரம், நாக மாணிக்கம் ஆகியோர் அடங்கிய குழு பொள்ளாச்சி மார்க்கெட், நேதாஜி சாலை, கிழமேற்குராஜா மில், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதியிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, குடிதண்ணீர், மதிய உணவு ஆகியவைகள் வழங்கினர்.
இதையடுத்து, மேற்கு காவல் நிலைய சரகம் குமரன் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த ராஜ்குமார் (37) என்ற மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரை காவல் துறையினர் மீட்டு விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை கிணத்துக்கடவுவில் உள்ள சரணாலயத்தில் இருந்து தப்பித்து வந்தது தெரியவந்தது.