திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஏறாவூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜா என்பவர், தமது இரு சக்கர வாகனத்தை பஜாரில் நிறுத்தி வைத்திருந்தபோது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆரம்பாக்கம் காவல் துறையினர், அவரது இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா காவல் துறையினரைக் கண்டித்து, தமது இரு சக்கர வாகனத்தைத் திருப்பித் தரக்கோரி, ஏறாவூர் பஜாரில் உள்ள செல்போன் டவரில் ஏறி, தற்கொலை செய்வதாகக் கூறி மிரட்டல் விடுத்தார். பின்னர் இதுகுறித்து கிராம மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.