தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் கரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி வைத்தும் வாகனத்தில் பெரிய திரை மூலம் விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பியும் பரப்புரை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு பரப்புரை வாகனங்களை பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் தொடங்கிவைத்தார். இந்த விழிப்புணர்வு பரப்புரை வாகனங்கள் பொள்ளாச்சியில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் தொடர்ந்து தெரிவிக்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: மத்திய அரசு விருது வென்ற விருதுநகர் ஆரம்ப சுகாதார நிலையம்!