தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை! - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே முன்விரோதம் காரணமாக ஒருவரை, நடு வீதியில் வைத்து கொலைசெய்த நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இளைஞர் கொலை
இளைஞரை கொலைசெய்த நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்

By

Published : Jun 18, 2020, 1:52 AM IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் லோடுமேன் சேகர். இவரது மகன் இடிமணி. இவர் கூத்தாடிவயல் கிராமத்தைச் சேர்ந்த இவரது நண்பர் சதீஷ் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் இடிமணி, சதீஷ் இருவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இடிமணி உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சதீஷ் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை குறித்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்த நபர்கள் இடிமணியின் நண்பர்கள் என்றும்; முன்விரோதம் காரணமாக கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, கொலை செய்த மூன்று பேரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர். மேலும், மருத்துவமனையில் உள்ள சதீஷிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details