தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இளம் காவலர்களை உருவாக்கும் காவலர்கள்!

சென்னை: பூவிருந்தவல்லி அருகே காவலர் தேர்வு எழுதவுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டி புத்தகத்தை அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்தியன் இலவசமாக வழங்கி ஊக்கப்படுத்தினார்.

இளம் காவலவர்களை உருவாக்கும் காவலர்கள்!
இளம் காவலவர்களை உருவாக்கும் காவலர்கள்!

By

Published : Oct 13, 2020, 8:14 AM IST

Updated : Oct 13, 2020, 9:16 AM IST

தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட 10ஆயிரத்து 906 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தமிழ்நாடு சீருடைத் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதற்காக பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டை காவல் துறையினர் காவல் ஆய்வாளர் விஜயராகவன் தலைமையில் நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், அகரமேல், மேப்பூர் உள்ளிட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த 45 ஏழை, எளிய மாணவர்களைத் தேர்வு செய்து, காவலர் தேர்வுக்கு தயார்ப்படுத்தி வருகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 750 ரூபாய் மதிப்புள்ள தேர்வு வழிகாட்டி புத்தகத்தை அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் தீபா சத்தியன் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார்.

விருப்பம் உள்ளவர்கள் காவல் நிலையத்தை தொடர்புகொண்டால் அவர்களுக்கும் பயிற்சி அளிக்கத்தயாராக உள்ளதாக காவல் ஆய்வாளர் விஜயராகவன் தெரிவித்தார். காவலர் தேர்வு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Last Updated : Oct 13, 2020, 9:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details