திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் வசிப்பவர் துரைமுருகன் (43). இவர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவந்தார். இவரது மனைவி ஜெயமாலா கடந்த 20 நாள்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். மனைவி இறந்ததிலிருந்து துரைமுருகன் பெரும் சோகத்திலும், மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.
மனைவி இறந்த சோகத்தில் தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை - Grieving the death of his wife
திருவள்ளூர்: தலைமைக் காவலர் ஒருவர் தனது மனைவி இறந்த சோகத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை மீட்டு பொன்னேரி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மனைவி இறந்த சோகத்தில் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பொன்னேரியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தலைமைக் காவலர் தற்கொலை செய்துகொண்டதை அறிந்துவந்த பொன்னேரி காவல் துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தலைமைக் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக காவலர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.