கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள பெரியசிறுவத்தூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் காவலாளி இல்லாததால், அதனை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், டாஸ்மாக் கடைக்குள் புகுந்து 250 மதுபானப் பாட்டில்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
இவற்றின் மதிப்பு 32 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கொள்ளை சம்பவத்தில் இருந்து தப்பிப்பதற்காக, கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், கண்காணிப்புக் கேமராவின் வயர்களை அறுத்து எறிந்ததுடன், டிவி ரிசிவர், ஹார்டு டிஸ்க் போன்றவற்றையும் அள்ளிச் சென்று விட்டனர்.
கடை வைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் உரிமையாளர் கிருஷ்ணன் என்பவர் வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் கொள்ளை போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.