கோயம்புத்தூர் போத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஹாட் சிப்ஸ் என்ற கடைக்கு நேற்று வாடிக்கையாளர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவரிடம் மற்றொரு வாகனத்தில் வந்த நபர் முகவரி கேட்டுள்ளார்.
அப்போது, அவர் முகவரியை கூறிவிட்டு வாகனத்தில் இருக்கும் சாவியை எடுக்காமல் கடைக்கு பொருள்களை வாங்க சென்றார். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, வேறு ஒரு நபர் சாவியுடன் இருந்த வாகனத்தை எடுத்துச் சென்றுவிட்டார். இவை அனைத்தும் அக்கடையிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.