நாகப்பட்டினம் அடுத்த மேல வாஞ்சூரில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வந்தவர் செந்தில். நரிமனம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், வழக்கம்போல் இன்று (ஜூன் 23) கடையை திறக்க தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
நாகூர் கங்களாஞ்சேரி சாலை பூதங்குடி ஐ.ஓ.சி அருகே சென்றபோது, முட்புதர்களில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத கும்பல் செந்திலின் இருசக்கர வாகனத்தை மறித்து அவரை சரமாரியாக வெட்டியது. முகம், கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.