செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் டிஜிபி ஆணைக்கிணங்க காவல் ஆய்வாளர் சரவணன் இன்று(ஜூன் 28) அனைத்து காவலர்களுக்கும் வாய்மொழி உத்திரவினை வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”அனைத்து காவலர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் கையுறை அணிய வேண்டும். இதனை முதலில் காவல் துறையினர் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் ஊரடங்கு பிறப்பித்துள்ள இந்நிலையில் சாலைகளில் அத்துமீறி சுற்றி வருபவர்கள், இருசக்கர வாகனத்தில் வலம் வருவார்கள் ஆகியோரிடம் வாகன சோதனையின்போது முக்கியமாக அத்தியாவசிய பயணங்களை தடை செய்யாமல் வீண் பயணத்தை மேற்கொள்ளும் நபர்கள் மீதும், வாகனங்கள் மீதும் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேசமயம் வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் பணியின்போது அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகழுவ வேண்டும் என அவர் தெரிவித்தார்.