கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், ஜூன் மாத ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு மூன்றாவது வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய காவல் ஆய்வாளர்! - காவல் ஆய்வாளர் உணவு வழங்கினார்
செங்கல்பட்டு: சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு பல்லாவரம் காவல் ஆய்வாளர் உணவு வழங்கினார்.

காவல் ஆய்வாளர்
இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் எந்த தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமுலில் உள்ளது. பால் விநியோகம், மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பல்லாவரம் பகுதியில் சாலையோரம் வசிப்பவர்கள், ஆதரவற்றோர் பலர் இன்று உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்ட பல்லாவரம் காவல் ஆய்வாளர் இளங்கோவன், சாலையோரத்தில் இருந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.