ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 663 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 450 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் தினசரி 500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
கிராமம், நகரம் என அனைத்துப் பகுதிகளிலும் கரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.