கரோனா பரவாமல் தடுக்கும்வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஊரடங்கு மீறல்: 80 நாள்களில் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் கைது!
சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 80 நாள்களில் ஆறு லட்சத்து 20 ஆயிரத்து 921 பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
Curfew time collections
ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 80 நாள்களில் தடையை மீறியதாக ஆறு லட்சத்து 20 ஆயிரத்து 921 பேரைக் காவல் துறை கைதுசெய்து பிணையில் விடுவித்துள்ளது. அதேபோல் நான்கு லட்சத்து 63 ஆயிரத்து 817 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. 11 கோடியே 89 லட்சத்து 48 ஆயிரத்து 799 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.