விருதுநகர்-சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விருதுநகர் காவல் துணைக்கண்காணிப்பாளர் சிவபிரசாத், காவல் துறையினர் இன்று (ஜூன் 22) காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அதுசமயம் அவ்வழியாக குல்லூர் சந்தையிலிருந்து சாத்தூர் சென்றுகொண்டிருந்த மினி லாரியை தடுத்துநிறுத்தி சோதனைசெய்தனர். சோதனையில் வாகனத்தில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரிப்பதற்காக கருந்திரி எடுத்துச் சென்றது தெரியவந்தது.