இளங்கோவன் தயாரித்துள்ள ‘காட்மேன்’ வெப் சீரிஸின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குநர் பாபு இதை இயக்கியுள்ளார்.
சர்ச்சை கிளப்பிய வெப் சீரிஸ் - தயாரிப்பாளர், இயக்குனர் மீது வழக்குப்பதிவு! - காட் மேன் வெப் தொடர்
‘காட்மேன்‘ வெப் சீரிஸ் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
![சர்ச்சை கிளப்பிய வெப் சீரிஸ் - தயாரிப்பாளர், இயக்குனர் மீது வழக்குப்பதிவு! God man](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-320-214-7380481-thumbnail-3x2-vadi-0106newsroom-1591004483-17.jpg)
‘காட்மேன்’ டீஸர் காட்சி வெளியானதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகின. அதாவது இத்தொடர் ஒரு குறிப்பிட்ட சமூகம் மற்றும் மதத்தை இழிவுப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான காட்சிகள் நீக்கப்பட்டு புதிய டீஸரும் வெளியிடப்பட்டது.
இருப்பினும் பல்வேறு தரப்பிலிருந்து ‘காட்மேன்‘ சீரிஸ் மீது புகார்கள் குவிந்ததால் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், தயாரிப்பாளர் இளங்கோவன் மற்றும் இயக்குநர் பாபு ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.