தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

காவல் துறையினர் தாக்குதல்: இளைஞர் மனமுடைந்து தற்கொலை - Suicide after hitting police

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே காவல் துறையினர் அடித்ததால், மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காவல் துறை தாக்குதல்: இளைஞர் தற்கொலை
காவல் துறை தாக்குதல்: இளைஞர் தற்கொலை

By

Published : Jun 27, 2020, 1:54 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் கணேசமூர்த்தி (வயது 29). கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த சனிக்கிழமை மாலை மதுபோதையில் பைக்கில் சென்றபோது தவறி விழுந்துள்ளார். அப்போது, அங்கு வந்த காவல் துறையினர், அவரைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கணேசமூர்த்தி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், அவரது மகனின் பள்ளி நோட்டில் தனது மரணத்திற்கு உளவுத்துறை காவலர் கார்த்திக் தான் காரணம் என்றும் எழுதி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அவரது உடல் எட்டயபுரம் அரசு மருத்துமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் நிலவி வருவதால், எட்டயபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details