தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஆட்டோ, கார் ஓட்டுனர்களுக்கு காவல்துறை அறிவுரை! - ஆட்டோ கார் ஓட்டுனர்கள்

கள்ளக்குறிச்சி: ஆட்டோ, கார் ஒட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கரோனா தொற்று விழிப்புணர்வு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

Police advice
Police advice

By

Published : Jul 10, 2020, 4:15 AM IST

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அனைத்து ஆட்டோ ஒட்டுனர்கள், கார் ஒட்டுனர்கள் என சுமார் 250க்கும் மேற்பட்டோருக்கு கரோனா குறித்த விழிப்புணர்வுகளையும், தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகளை கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் வழங்கினார்.

அதுமட்டுமின்றி ஆட்டோக்கள், கார்களில் அரசின் விதிகளின் படி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், முகக்கவசம் இல்லாமல் வரும் பயணிகளை ஏற்றக்கூடாது, என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ஒட்டுனர்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார். இதில் கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் செல்வநாயகம், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மணல் குவாரியில் மணல் எடுத்த குழியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details