இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை அடுத்த பெரியபட்டு பகுதியில் ஜவுளி பூங்கா என்ற பெயரில் பெயரளவில் 10 ஜவுளி தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு, அந்த பூங்காவுக்காக அமைக்கப்படும் ஒரு கோடி லிட்டர் சாயக்கழிவுகளை தூய்மைப்படுத்தும் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலையில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறை கழிவுகளை சாலைவழியாக கொண்டுவந்து சுத்திகரிப்பதுதான் திட்டமாகும்.
'சாயக்கழிவு ஆலை உரிமத்தை ரத்து செய்யாவிட்டால் மக்களைத் திரட்டி பாமக போராட்டம் நடத்தும்' - கடலூர் செய்திகள்
சென்னை: கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோவை பகுதியில் பல கோடி லிட்டர் சாயக்கழிவுகள் வெளியாகும் நிலையில், அவை முழுவதையும் இங்கு சுத்திகரிக்க முடியாது. அதனால், முடிந்தவரை சுத்திகரித்து, மீதமுள்ள கழிவுகளை தண்ணீருடன் கலந்து கடலில் செலுத்துவதுதான் திட்டமாகும். இதற்கு வசதியாக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நிலப்பரப்பில் 3.5 கிலோமீட்டர் தொலைவுக்கும், கடலுக்குள் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கும் குழாய்கள் அமைக்கப்படவுள்ளன. கோவை மண்டல சாயப்பட்டறை முதலாளிகள் வளமாக வாழ்வதற்காக கடலூர் மாவட்ட விவசாயிகள், மீனவர்களின் வயிற்றில் அடிப்பதை பாமக ஒருபோதும் அனுமதிக்காது.
பெரியப்பட்டு சாயக்கழிவு ஆலை அமைக்கப்பட்டால், காவிரி டெல்டாவின் கடைசி எல்லையாக முப்போகம் விளையும் பூமியாக திகழும் பெரியப்பட்டு, அதை சுற்றியுள்ள பகுதிகள் பாலைவனமாக மாறக்கூடும். இதனால் பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளும், வனப்பகுதிகளும் அழியும் ஆபத்து உள்ளது.
கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள ராசயன ஆலைகளால் அப்பகுதி நச்சு பூமியாக மாறிவரும் நிலையில், அவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் கடலூர் மாவட்ட மக்களின் விருப்பம் ஆகும். அதை நிறைவேற்றுவதற்கு பதிலாக, கூடுதல் கேடு விளைவிக்கும் சாயக்கழிவு ஆலையை அமைக்க அனுமதிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. எனவே, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடலூர் மாவட்ட மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும் என எச்சரிக்கிறேன் " என குறிப்பிட்டுள்ளார்.