திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனோ பாதிப்பு குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், " திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கரோனோ நோயாளி கடந்த மார்ச் 21ம் தேதி அனுமதிக்கப்பட்டார. இங்கு கரோனோவுக்காக மட்டும் ஆயிரத்து 100 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 600 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உள்ளவை ஆகும்.
நெல்லையில் அடுத்த வாரம் முதல் கரோனோவுக்கு பிளாஸ்மா சிகிச்சை - Plasma treatment for coronavirus
திருநெல்வேலி: அடுத்த வாரம் முதல் கரோனோவுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் 100 அவசர சிகிச்சை படுக்கைகள் மற்றும் 70 வெண்டிலேட்டர் தயார் நிலையில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 700 முதல் 900 வரை பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. இதுவரை 29 ஆயிரத்து 723 பேருக்கு பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 18 ஆயிரத்து 518 பேருக்கு இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 471 பேருக்கு கரோனா பதிப்பு உறுதியானது.
அடுத்த வாரம் முதல் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை. வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் உட்பட திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.