நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இதுவரை மாற்று திறனாளிகளில் அடையாள அட்டை பெறாதவர்கள், அட்டைகளை புதுபிக்காதவர்கள், மருத்துவ பரிசோதனைகளுக்கான அட்டை இல்லாதவர்கள், சலுகை கட்டண பேருந்து அட்டை பெறாதவர்களுக்கு என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ அட்டை வழங்கல்! - மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ அட்டை
நாமக்கல்: மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், அடையாள அட்டை, மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கான அட்டைகள் பரிசோதனைக்கு பின் உடனடியாக வழங்கப்பட்டன.

Physically challenged people in namakkal
அவர்களுக்கு உரிய ஆவணங்களை கொடுத்து மருத்துவ பரிசோதனை செய்து உடனடியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமில் சக்கர நாற்காலி, மூன்று சக்கர வாகனம், காது கேளாத கருவி உள்ளிட்ட உபகரணங்களை பெறுவதற்கான விண்ணப்பங்களும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன.