தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கம்பருக்கு மணிமண்டபம் கட்ட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு! - கம்பருக்கு மணிமண்டபம் கட்ட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி: கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு மணிமண்டபம் கட்ட வலியுறுத்தி இந்து தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Hindu Tamilar Party Petition To Collector
Hindu Tamilar Party Petition To Collector

By

Published : Sep 22, 2020, 10:05 AM IST

கன்னியாகுமரி மாவட்ட இந்து தமிழர் கட்சியில் மாவட்ட தலைவர் சிவராம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், "ராமாயண காவியத்தை தமிழில் எழுதியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கம்பர் வழிபாடுச் செய்த சரஸ்வதி திருவுருவச்சிலை ஒவ்வொரு ஆண்டும் கேரளா தசரா விழாவிற்கு எடுத்துச் செல்லக்கூடிய நடைமுறை இன்றும் இருந்து வருகிறது.

எனவே கம்பராமாயணத்தையும் கம்பர் பெருமானையும் கௌரவப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு குமரி மாவட்டத்தில் கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும்.

மேலும் டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் கம்பருக்கு திருவுருவச் சிலையும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கம்பர் திருவுருவப்படமும் வைக்க வேண்டும்.

மேலும், கம்பர் பிறந்த தினத்தை கம்பராமாயண தினமாக அறிவிக்க வேண்டும்.

அதேபோல், கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் தேசிய அளவில் கௌரவப்படுத்த கம்பர் பிறந்த தினத்தை தேசிய விழாவாக கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது,

ABOUT THE AUTHOR

...view details