கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று 8 ஆயிரத்து 538 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இருப்பினும் தமிழ்நாட்டில் காவலருக்கான காலி பணியிடங்கள் அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 2020-21ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் காவலருக்கான எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு நடத்துவது சிரமம், எனவே 2019-2020 ஆம் ஆண்டு அனைத்து தகுதி சுற்றுகளில் தேர்ச்சி பெற்றவர்களை காவலர் பணியில் அமர்த்தினால் அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாது.