அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதிகளில் கனரக வாகனங்கள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விபத்து, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக் காரணம் காட்டி இந்தத் தடை அமலில் உள்ளது.
எனினும், தற்போது பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் அதிகப்படியான கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மணல், எம்சாண்ட், கருங்கற்கள் சரக்கு ஏற்றி வரும் லாரிகளால் விபத்துகளும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.