நாடு முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து உடற்பயிற்சிக் கூடங்களும் மூடப்பட்டுள்ளன.
உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு - உடற்பயிற்சிக் கூடங்கள்
தூத்துக்குடி: உடற்பயிற்சிக் கூடங்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கக்கோரி உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க அனுமதித்தால் தகுந்த இடைவெளி விட்டு கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சி கூடம் நடத்த தயாராக இருப்பதாகவும் கூறி தூத்துக்குடி மாவட்ட உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர்.