சமூக வலைதளங்களில் கருப்பர் கூட்டம் என்ற பெயரில் இயங்கி வரும் யூ டியூப் சேனலில் இந்து தெய்வங்களையும் வழிபாட்டு முறைகள், புனித நூல்களை இழிவுப்படுத்தும் விதமாகவும் ஆபாச வார்த்தைகளை கொண்டு திட்டுவது போன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை தடை செய்ய கோரி மனு! - District collector office
திருப்பூர்: இந்து நம்பிக்கையை இழிவுப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
petition to ban karuppar koottam YouTube channel
பிறரின் மனதைப் புண்படுத்தும் விதமாக கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் இயங்கி வரும் யூ டியூப் சேனலை தடை செய்யக் கோரியும் அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்த நபரை உடனடியாக கைது செய்யக்கோரியும் இந்து முன்னணி சார்பில் அதன் நிர்வாகிகள் இந்து கடவுள் படம், வேலுடன் வந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.