கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்திலும் ஜூலை மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஆட்சியர் சாந்தா செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; "பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 5ஆம் தேதி அன்று காலை 6 மணி முதல் ஜூலை ஆறாம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடி ஏற்படுத்தப்பட்டு அரசுப் பணி நிமித்தமாக செல்லும் வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.