பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்! - இந்திய கம்யூனிஸ்ட்
பெரம்பலூர்: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான ஒடுக்கப்பட்டோர் கூட்டியக்கம் சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்! Protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:25:49:1600325749-tn-pbl-03-all-party-protest-script-image-7205953-17092020121714-1709f-00766-59.jpg)
Protest
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்