விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர், பாடாலூர், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், சத்திர மனை, நக்கசேலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் அருகே 400 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு - Perabalur district News
பெரம்பலூர்: நாரணமங்கலம் பகுதியில் 400 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவருடைய மகன் ரகுபதி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது தோட்டத்தில் சின்ன வெங்காயத்தை பட்டரை போட்டு நடத்தி வருகிறார். இந்நிலையில் ரகுபதி இன்று காலை தனது தோட்டத்திற்கு வந்து பார்த்த போது 400 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், இதுகுறித்து ரகுபதி பாடாலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சின்ன வெங்காயம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.