கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் (ஜூலை 5,12,19,26) எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். நாளை தருமபுரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் வணிக நிறுவனங்கள், காய்கறிக் கடைகள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை விடுமுறை... டாஸ்மாக்கில் குவிந்த மதுப்பிரியர்கள் - தர்மபுரியில் முழு ஊரடங்கு
தருமபுரி: நாளை முழு ஊரடங்கின் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டமாகக் குவிந்து மதுப்பிரியர்கள் மதுவை வாங்கிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளை முழு ஊரடங்கு தருமபுரி டாஸ்மாக் மதுபானக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள்
இதனால், மதுப் பிரியர்கள் அனைவரும் இன்றே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூட்டமாகக் குவிந்தனர். கவுன்டரில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், முண்டியடித்துக்கொண்டு மதுவை வாங்கிச் சென்றனர். இதனால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.