திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், "10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நபர்களை விடுதலை செய்ய வேண்டும்.
10 ஆண்டுகள் சிறையிலிருக்கும் நபர்களை விடுவிக்கக் கோரி மனு! - திருப்பூர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
திருப்பூர்: 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நபர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
திருப்பூர் மக்கள் ஜனநாயக கட்சி
அதேபோல் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை போல ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்.
இஸ்லாமிய பெயர் இருப்பதாலேயே 25 வருடங்களுக்கும் மேலாக சிறை தண்டனை வசிக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.