காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் சளி,இருமல், காய்ச்சல் காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தனிமைப்படுத்தப்பட்டவர்களை முகாம்களில் தங்கவைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! - காவல்துறையினர், வருவாய்த் துறையினர்
காஞ்சிபுரம்: கரோனா பரிசோதனை மேற்கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை தங்கவைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரிசோதனை செய்யப்பட்டு இரண்டு நாள்களுக்குப் பிறகு பரிசோதனை அறிக்கை பெறப்படுகிறது. அதுவரை பரிசோதனை மேற்கொண்டவர்களை தனிமைபடுத்தி கண்காணித்து மருத்துவ சிகிச்சை வழங்க காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பெருநகராட்சிக்கு சொந்தமாக உள்ள அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்கவைப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து திருமண மண்டபம் அருகில் உள்ள அம்பேத்கர் நகர்பகுதி மக்கள் ரயில்வே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்களிடம் காவல்துறையினர், வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக மருத்துவமனை அமைந்துள்ள ரயில்வே சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.